மித் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் அமித் மோகன். திருடா திருடி பட இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இதனை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தினாவின் 50-வது படம் இது. தனுஷ், அனன்யா, கே.பாக்யராஜ், சுஹாசினி மணிரத்னம், ஷீலா, இளவரசன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
2002-ஆம் ஆண்டில் வெளியான "நந்தனம்" என்ற மலையாள படத்தின் ரீமேக் இது. மஹாலக்ஷ்மி (அனன்யா) ஒரு அனாதை பெண்ணாக வருகிறார். அவர் பழனியில் வசிக்கும் தங்கம்(சுஹாசினி) வீட்டில் வேலைக்காரியாக வேலைக்கு சேர்கிறார். அவருக்கு யாரும் இல்லாததால், தன் கதையை தன்னை சுற்றி இருக்கும் சாமி படங்களுடன் பகிர்ந்து கொள்வார். தனக்கென முருகனால் அனுப்பி வைக்கப்படும் ஒருவான் வருவான். அவனை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வாழ்க்கையை கழிக்கிறாள்.
இதற்கிடையில் தங்கத்தின் மகனாக (மனோ-வாக) வருகிறார் கதையின் ஹீரோ கிருஷ்ணா. இவர் வெளிநாட்டில் படிக்க செல்கிறார். ஒரு சிறிய விடுமுறைக்கு பழனிக்கு வருகிறார். விடுமுறைக்கு வரும் மனோ, மஹாலக்ஷ்மி பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுகிறார். காதலித்தும் அவர்களது காதலை தங்கத்திடம் சொல்லியும் தங்கத்தால், ஏற்று கொள்ளபடுவதில்லை.
உடனே மேற்படிப்பு படிக்க மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் மனோ உள்ளார். இதற்கிடையில் தான் தனுஷ் (சரவணன்) சமையல்காரராக வருகிறார். உண்மையான காதலை புரிந்து கொண்ட அவர் எப்படி அவர்களது காதலை சேர்த்து வைக்க (மாமா-வாக) பாடு படுகிறார். இறுதியில் இவர்களை எப்படி ஒன்று சேர்க்கிறார். இந்த ஜோடி ஒன்று சேர்கிறதா, இல்லையா என்பது மீதிக் கதை.
இதற்க்கு முன், நல்ல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா, ஒரு சராசரியான படத்தை வழங்கியுள்ளார். அவர் ரீமேக் செய்யாமல், சொந்தக் கதை எதையேனும் இயக்கி இருக்கலாம். இந்த அளவுக்கு பெரிய நடிகராக இருக்கும் நிலையிலும், இது போன்ற கௌரவ வேடம் ஏற்ற தனுஷை பாராட்ட வேண்டும். ஹீரோயின் அனன்யா ஓகே. இசையும் குட். போலி சாமியாராக வரும் விவேக் வருவதும் போவதும் தெரியவே இல்லை. எல்லோரையும் குறை சொல்லும் சுஹாசினிக்கு, அவரது மேக்கப் ஓவராக இருந்ததெல்லாம் தெரியவில்லையே, கவனித்துக் கொள்வாரா?
ஒட்டு மொத்தத்தில், நேரத்தை கழிக்க ஒரு நார்மல் படம்.
பாத்துர வேண்டியதுதான்....
ReplyDeleteஹை வடையும் எனக்கா....
ReplyDeleteபாடம் பார்த்து சொல்லேறேன்...
ReplyDeleteஎப்படி இருக்குன்னு..
EVVALAVU NAAL KATHIRUNTHIKA SUKASINIYAI THUTRUVATHARKU OK THANK YOU
ReplyDelete