Sunday, May 12, 2013

கமலின் அடுத்த படம்..! வடிவேலுக்கு போடப்பட்ட பிரமாண்ட செட்..!



விஸ்வரூபம் 2' பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கமல். அதற்குள் அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

'தலைவன் இருக்கின்றான்', 'இந்தியன் 2' என வரிசை கட்டிய செய்திகளில், தற்போது கூடுதலாக இன்னும் ஒரு செய்தி இணைந்து இருக்கிறது.

'விஸ்வரூபம் 2' படத்தினை முடித்து விட்டு, லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இப்படத்தினை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறதாம்.

இப்படத்தின் பணிகளில், கமல் இந்த வருட இறுதி முதல் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறாராம். முழுக்க அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதுமட்டுமன்றி ஒரே ஷெட்டியூலில் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த 'Special 26' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் லிங்குசாமி. உரிமையை வாங்கிய சமயத்தில் லிங்குசாமி " Special 26 ரீமேக்கில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன் ": என்று தெரிவித்தார்.

இச்செய்திக்கு இருவரும் என்ன சொல்ல போகிறார்களோ?..

******************************


தனது நகைச்சுவையின் மூலம் கோடம்பாக்கத்தில் நகைச்சுவை ராஜாவாக வலம் வந்த வடிவேலுவை, தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் இன்றி பதுங்கியிருந்த அவர், தற்போது பாய தயாராகிவிட்டார்.

அதுவும் சாதாரணமான பாய்ச்சல் இல்லை. தமிழகமே அதிரும் அளவுக்கு அவருடைய பாய்ச்சல் இருக்க வேண்டும் என்று, தற்போது ஹீரோவாக நடிப்பது என்று முடிவெடுத்த வடிவேலு 'தெனாலிராமன்' என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'பட்டா பட்டி' என்ற படத்தை இயக்கிய யுவராஜ் இயக்குகிறார்.

இப்படத்தின் போட்டோஷூட் நேறு முன் தினம் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. அதற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுக்குகொண்டிருக்கிறது. இந்த செட்டுக்கான வேலைகள் முடிய இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. செட் அமைக்கும் பணி முடிந்தவுடன் தெனாலிராமன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தின் அரண்மனை செட்டும் கிட்டதட்ட இம்சை அரசன் படத்தில் உள்ள அரண்மனை செட் போலவே அமைக்கப்பட்டு வருகிறதாம்.

1 comment:

  1. வைகைப்புயல் இனி அமைதியாக வரட்டும்... சிரிப்போம்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...