Sunday, May 12, 2013

ரஜினியின் கோச்சடையான்..! பைனல் டச் கொடுக்கிறார் கமல்ஹாசன்...!



ரஜினியின் கோச்சடையான் பற்றிய ஆச்சரியமான ஒரு தகவல். வழமையான படமாக இல்லாமல் வித்தியாசமான தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ளதால், ரஜினி, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிக்கிறாராம். 

இப்படியான தொழில்நுட்பம் எந்தளவுக்கு தனது ரெகுலர் ரசிகனை ரீச் பண்ணும் என்பதே ரஜினியின் பெரிய யோசனை. அதற்காக அவர் லேட்டஸ்ட்டாக கன்சல்ட் செய்யும் நபர் யார் என்பதே ஆச்சர்யம். ரஜினியின் நண்பரும், தொழில்முறை போட்டியாளருமான கமல்தான் அவர்! 


“இதுவரை ரெடியான படத்தை கமல் ஒருதடவை பார்க்கட்டும். அவர் ஏதாவது மாற்றங்கள் செய்ய சொல்கிறாரா என்று பார்க்கலாம்” என்று ரஜினி கூறியதாக தகவல். 

சினிமா துறையை பொறுத்தவரை கமல் ஒரு ஜீனியஸ் என்பது ரஜினியின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர் படத்தை பார்த்து விட்டால், ரிசல்ட்டை தெளிவாக சொல்லி விடுவார் என்று கோச்சடையான் டீமிடம் தெரிவித்த ரஜினி, தாமே இது தொடர்பாக கமலிடம் பேசுவதாக கூறினாராம். 

சொன்னது போல மறுநாள் பேசியும் விட்டாராம்….

லேட்டஸ்ட் தகவல், கமல் கோச்சடையான் படத்தை பார்க்க போகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. கமல் கோச்சடையான் படத்தை பார்க்கிறார் என்ற செய்தி சீக்கிரம் வெளியாகும். அதன் பின்னரே கோச்சடையான் ரிலீஸ் தேதி ‘ரியலாக’ அறிவிக்கப்படும்! 

இது தொடர்பாக கமல் வட்டாரங்களில் விசாரித்தபோது, ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான் என்கிறார்கள். 

“ரஜினியும் நானும் ஒரே காலகட்டத்தில் இளம் நடிகர்களாக டாப்பில் இருந்தவர்கள். இன்னமும் அதே இடத்தை தக்க வைத்திருக்கிறோம் என்றால், அதற்கு காரணம், எங்களுடைய பிரண்ட்ஷிப்தான். ரஜினி கேட்டால், எதையும் என்னால் மறுக்க முடியாது. அவருக்காக கோச்சடையானை பார்க்க போகிறேன்” என்றாராம் கமல்! 

இன்னும் ஓரிரு தினங்களில், எங்கே கமலுக்கான ப்ரீவியூ என்பது தெரிந்துவிடும். 

ஒருவேளை கமலின் ‘டச்’களும் கோச்சடையானில் இருக்குமோ!

2 comments:

  1. நல்லாதானே போயிட்டு இருந்தது.........

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...