இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது ஸ்ரீசாந்த் கூறியதை அவரது வழக்கறிஞர் ரிபிக்கா ஜான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விசாரணையின் போது ஸ்ரீசாந்த் கூறியதாவது : நான் எந்த ஸ்பாட் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை; நான் அர்ப்பணிப்பு உணர்வுடனும், முழுமனதுடனுமே போட்டியில் கலந்து கொண்டேன்; நான் அப்பாவி; எனது வாழ்க்கையில் இது சோதனை காலம்; நமது சட்டத்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது; நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது, எனது நேர்மை மற்றும் மதிப்பை நான் நிரூபித்து திரும்பபெறுவேன். இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
தினமலரில் வெளிவந்த இந்த செய்திக்கு சில வாசகர்கள் கொடுத்த கருத்துக்கையும் பாருங்கள்...!
////////////
உனக்கு ஏன் இந்த வேலை, நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவதனா?
மக்களே இவன் சொல்றதெல்லாம் நம்பாதிங்க,அத்தனையும் பொய்.பாருங்க
பண்றதெல்லாம் பண்ணிட்டு திருவிழா கூட்டதில காணமல் போன புள்ளமாதிரி... அடே
உன்ன பத்தி எனக்கு தெரியும் மகனே...நீ ஆணியே போடுங்க
வேண்டாம்..கிளம்புடி..காத்து வரட்டும்..
////////////////////
ஏடுகொண்டல வாடா சீனிவாசா மெய்யாலுமே இந்த சூதாட்டத்தின் முக்கிய
//குருநாதர் // சென்னையை சேர்ந்த பெரிய பரம்பரை சினிமா ஸ்டூடியோ வீட்டுப்
பேரன் இவரது மாமனார் பி சி சி ஐ யின் பெருந்தலை மற்றும்
முன்னணியிலிருக்கும் ஒரு அணியின் உரிமையாளர் ..ஏற்கனவே போலீஸ்
பிடியிலிருக்கும் முக்கிய சூதாட்டப் புள்ளியின் வாக்குமூலம் இது .பிரசாந்த்
இது மெய்யாப்பா? .ஆகமொத்தம் இந்த ஐ பி எல் துவக்கப்பட்டது கிரிக்கெட்டை
வளர்க்க அல்ல..சூதாட்டத்தை வளர்க்க எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது
//////////////////////
ஐயோ பாவம் என்ன செய்ய நம் காவல் துரை இப்படி தவறு செய்யாத அப்பாவி மனிதரை கைது செய்து விட்டது
பாவம் விடுங்க சார் இவரை.
அவர் முகத்தை பாருங்க. இவரை போய்?????????????
///////////////////
யப்பா இது உலகமாக நடிப்பு டா சாமி... தம்பி ரீல் அறுந்து 1 வாரம் ஆச்சு .. இன்னும் பிட்டு போடாத
/////////////
சிலர் எத்தனையோ கோடிகளை திருமணத்துக்கு தண்ணீர் போல செலவு செய்தார்கள்.
அவர்களை பிடிக்காத காவல்த்துறை ஒரு விளையாட்டு வீரர் 1.95 லட்சத்துக்கு உடை
வாங்கியது குற்றம் என்கிறது. 2 லட்சம் என்பது சர்வதேச அளவில் மிக கம்மியான
தொகை. தவறான ஆளாய் பார்த்து பிடிப்பது காவலர்களின் வேலை போல அல்லவா
இருக்கிறது...
///////////////////////
எத்தனை
கோடிக்கும் அவர் வாங்கட்டும் அது பிரச்சனை இல்லை அந்த பணம் எப்படி வந்தது
என்பதற்கு விளக்கம் வேண்டும், அவன் கோடி செலவு செய்தான் அவனை பிடிக்கவில்லை
இவனை ஏன் என்பது சரியான வாதம் இல்லை. ஸ்ரீசாந்த் தன வருமானம் வந்த விதம்
பற்றி கணக்கு காட்டிவிட்டால் இது ஒரு பிரச்சனை ஆகாது. அந்த பணம்
சட்டபூர்வமாக ஒப்புக்கொள்ளககூடியதாக இருக்கவேண்டும்....
///////////////
தவறான
உதாரணம்.. லஞ்சபணத்தில் வாங்கியது என்று தான் காவல் துறை கூறியுள்ளது..
வாங்கினது தவறு என்று கூறவில்லை ... ஓரளவுக்கு ஆதாரங்களை சமர்பித்தால் தான்
கைது மற்றும் காவல் நீடிப்பு எல்லாம் செய்ய முடியும்...../
./////////////////////
அழகிகளுடன் குதாடும் போது நன்றாக இருந்தது, இப்போது "நான் அவன் கிடையாது என்று சொல்கிரையா".
மாட்டிக்கறவவங்க எல்லாம் சொல்றதுதான். இது.
ReplyDeleteஉங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/
ReplyDelete