Monday, May 13, 2013

இது போதாது..! இவர்களை இன்னும் களி தின்னவைக்க வேண்டும்...!




"சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என, வாய்கிழிய பேசுகிறோம். ஆனால், நடைமுறையில் சாத்தியப்படுகிறதா? சிறைச்சாலையிலும் அந்தஸ்து பார்க்கப்படுகிறது. எனவே தான், அங்கும், ஏ, பி, சி என, வகுப்புகள் பிரிக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களையும், "அந்தஸ்து'க்கு அழைத்துச் செல்ல நேரிடுகிறது.

சட்டத்தின் முன் குற்றவாளிகள் அனைவரும் சமம் என்று சொன்னால், சிறைச்சாலையில் எதற்கு, ஏ,பி,சி? தேவையில்லையே! அதனால் தான், சமுதாயத்தில் உ
லா வந்து கொண்டிருக்கும், அரசியல் பிரமுகர் ஆகட்டும், பணம் படைத்தவர் ஆகட்டும், கடுகளவு கூட பயமறியாது, சர்வ சாதாரணமாக குற்றம் புரிய விழைகின்றனர்.




சமீபத்தில், பா.ம.க., பிரமுகர்கள்  
அனேகர் கைதி செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவு, பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன; பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில், பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஏன் இந்த அவல நிலை? 



ஒவ்வொரு மரமும், இயற்கை நமக்குத் தந்த கொடை. விருப்பம் போல் வெட்டுவதற்கு, பலியாடுகள் அல்ல அவை என்பதை, ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். அதுவும் ஒரு உயிர் தான் என்பதை, சிந்திக்க வேண்டும்.





சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது கடுமையாக்கப்பட வேண்டும். அப்போது தான், தனி நபர் செல்வாக்கு, செல்லாக்காசாக மாறும்.இல்லையெனில், தனி நபர் துதிபாடும் புல்லுருவிகள், பிரமுகர்களின் போர்வைக்குள் புகுந்து, தங்களின் இழிவான செயல்களால், அதாவது மரம் வெட்டுதல், பேருந்தின் மீது கல் மற்றும் பெட்ரோல் குண்டுகள் எறிதல், ஆள் கடத்தல், ஆட்களை மிரட்டுதல், தங்களை வீரர்கள் என, தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல் ஆகியவை ஒழியும்.



மேற்படியான இழிவான செயல்களைச் செய்யும், தலைவன் முதல் தொண்டன் வரையானவர்களுக்கு, குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் தண்டனை தந்து, களி தின்ன வைத்தால் தான், மேற்படி தவறுகள் நடைபெறாமல் இருக்கும். இல்லையேல், நாடு சுடுகாடாக மாறும்!



மெயிலில் இ.ராஜகுமார், திருப்பூர்.

4 comments:

  1. 20 ஆண்டுகள் குறைவு... களியும் கூடாது...

    ReplyDelete
  2. இந்த நாதாரிகளுக்கு ஜெயிலுக்குள்ள பிரியாணியே வாங்கிக்கொடுப்பங்க நண்பர்களே.அவனுகளாவது, களி திங்கறாதாவது?

    ReplyDelete
  3. இ.ராஜகுமார்..
    ஒவ்வொரு மரமும், இயற்கை நமக்குத் தந்த கொடை. ///விருப்பம் போல் வெட்டுவதற்கு, பலியாடுகள்/// அல்ல அவை என்பதை, ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். அதுவும் ஒரு உயிர் தான் என்பதை, சிந்திக்க வேண்டும்... எந்த மதத்தில் ஆடுகளை பலியிட சொல்லி இருக்கிறார்கள்??? எல்லாம் நாம நம்மிட சுயநலத்துக்காக உருவாக்கின சம்பிரதாயங்கள் தான்... நீங்க இதைப்பற்றி ஒரு கட்டுரை தரனும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...