Thursday, May 9, 2013

பாலியியல் தவறுகள் நடப்பது ஏன்..? அதிர்ச்சியூட்டும் உண்மை காரணம்...!


பாலியல் குற்றங்கள் ஏற்பட, பெண்கள் மட்டுமே காரணம் என்று, மத்தியப் பிரதேச முன்னாள் மந்திரி ஒருவர் சொல்லியிருக்கிறார்.அதாவது பெண்கள் கவர்ச்சியைக் குறைத்துக் கொண்டால், ஆண்கள் திருந்திவிடுவர் என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கிறார். 

அவரது கருத்தில் ஓரளவு உண்மையிருந்தாலும், அது முற்றிலும் ஏற்புடையதல்ல. காரணம், இன்று பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கல்லூரி மாணவியர் மட்டுமல்ல, கள்ளங்கபடமற்ற, 3 முதல், 10 வயது வரை உள்ள அப்பாவி சிறுமியரும் இடம் பெறுகின்றனர்.

தன்னொழுக்கம், சுய கட்டுப்பாடு, மனிதாபிமானம் இந்த மூன்றையும் இழக்கும் ஒரு மனிதன், பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறான்; அவனுக்கு வயதோ, கவர்ச்சியோ ஒரு பொருட்டல்ல. அதேசமயம், இன்றைய பாலியல் பிரச்னைகளுக்கு, நாகரிகம் என்ற பெயரில், பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கலாசார சீரழிவும், ஒரு காரணம் தான் என்பதை, யாரும் மறுக்க முடியாது.


இன்று, பெண்களை ஒரு போதைப் பொருளாகவே சித்தரிக்கும், சினிமாப் பாடல்கள் மற்றும் காட்சிகள்; வியாபார நோக்கில் நடுப்பக்கத்தில் கவர்ச்சிப் படங்களாக வெளியிடும் வாரப் பத்திரிகைகள்; சாதாரண டூத் பேஸ்ட், பிளேடு, ஷேவிங் கிரீம், சாக்லேட் குளிர்பானங்களின் விளம்பரங்களுக்கெல்லாம், பெண்களைத் தவறாகப் பயன்படுத்தும் தொலைக்காட்சிகள், இதுபோன்ற இளைஞர்களின் மனதைத் திசை திருப்பும் ஊடகங்களுக்கும், இதில் முக்கிய பங்கு இருக்கிறது.

தங்கள் உரிமைக்காகப் போராடும், எந்த பெண்கள் இயக்கமாவது, தங்களை இழிவுபடுத்தும் இம்மாதிரி செயல்களுக்கு எதிராக குரல் கொடுத்ததுண்டா? சினிமாக்களுக்கு முறையான தணிக்கை, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை, வழக்கு விசாரணையில் விரைவான தீர்ப்பு, அத்தோடு பெண்கள் அதிநவீன நாகரிகத்துக்கு அடிமையாகாமல், தங்களைக் காத்துக் கொள்வது ஆகியவை, பாலியல் குற்றங்களை வெகுவாகக் குறைக்க உதவும்.

4 comments:

  1. மத்தியப் பிரதேச முன்னாள் 'மந்திக்கு' பெண் பிள்ளைகள் இல்லையோ...?

    இளைஞர் இளைஞின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்...? ஒருவேளை அவர்களும் அப்படித்தானோ...?

    ReplyDelete
  2. கலாசார சீரழிவும், ஒரு காரணம் தான் என்பதை, யாரும் மறுக்க முடியாது///////////

    உண்மை

    ReplyDelete
  3. In my view, uncontrolled internet reaching the handset is one of the most important reasons. We need to do something about it fast.

    ReplyDelete
  4. இது கலாச்சார சீரழிவு இல்லை. காலமாற்றம் தரும் சாதாரண நிகழ்வு. இதுவும் மாறும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...