Saturday, May 18, 2013

சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...


வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திக்கேயனை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும்தான் இன்றைக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு எஞ்ஜீனியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. 

படிக்கும் போது அவர் செய்த புராஜெக்ட் ஒன்று இப்போது 160 மில்லியன் டாலர்கள் சம்பாதித்து கொடுத்துள்ளது. ஆனால் அது சிவகார்த்திக்கேயனுக்கு அல்ல. மற்றொருவர் அந்த புகழையும் பணத்தையும் தட்டிச் சென்று விட்டாரம். 

சிவகார்த்திகேயன் குழுவினர் கல்லூரியின் இறுதி ஆண்டில் ஒரு 'Face Recognition software'-ஐ புராஜெக்டாக எடுத்து செய்திருக்கின்றனர். புராஜெக்டை நல்ல முறையில் முடித்து 200-க்கு 198 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர். சிவகார்த்திகேயன் குழு செய்த புராஜெக்டை பரிசோதனை செய்த தேர்வு கண்காணிப்பாளர், இவர்களின் நல்ல முயற்சியை பாராட்டியதோடு தனது மாணவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று சொல்லி அதன் நகல் ஒன்றை எடுத்துச் சென்றாராம். 

சிவகார்த்திகேயன் கொடுத்த புராஜெக்டை லேசாக மாற்றியமைத்த அந்த பேராசிரியர், அதனை தனது புராஜெக்ட் எனக்கூறி டாக்டரேட் பட்டம் பெற்றறிருக்கிறார் . 

தற்போது அந்த 'Face Recognition software'-ஐ வாங்க பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசுகின்றனராம். 160 மில்லியன் டாலர் விலைபோகும் அந்த சாஃப்ட்வேரைப் பற்றி கவலைப்படாத சிவகார்த்திகேயன் தொடர்ந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறாராம். 

அவரது முயற்சியில் வெற்றி பெற்று தற்போது இரண்டு கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் சிவ கார்த்திக்கேயன். இதைப் பற்றி கேட்டால், இதெல்லாம் சாதரணம் பாஸ் என்பது போல சிரிக்கிறார் ஜீனியஸ் சிவகார்த்திக்கேயன்.

1 comment:

  1. நண்பர் ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள நிகழ்ச்சிக்கு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று சனிக்கிழமை 18-05-2013 அன்று,

    பதிவுகள் போடாமல் அவருக்கு துக்கம் அனுசரிக்க விடுத்த அழைப்பை நான் கவனிக்க வில்லை பதிவை போட்டபிறகுதான் கவனித்தேன்...

    நேற்றும் நான் தொடர்பில் இல்லை...

    அதனால் பதிவுலகிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...