Monday, May 27, 2013

எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் - சோ அதிசயப் புகழாரம்!


பொதுவாக பாராட்டுவதில் பத்திரிக்கையாளரும் நடிகருமாகிய சோ ராமசாமி மிகவும் கஞ்சத்தனமாக இருப்பவர்.

விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம். சமீபத்தில் ஜெயலலிதாவைத்தவிர வேறு யாரையும் அவர் பாராட்டுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஜெ.-வுக்கு அப்படி ஒரு ஆதரவு!

உண்மையில் இசை உலகில் சுப்புடு எப்படியோ அப்படித்தான் அரசியலிலும், சினிமாவிலும் சோ! அவர் ஒருவரை புகழ்கிறார் என்றால் அது வசிஷ்டர் வாயால் கிடைத்த பிரம்ம ரிஷி பட்டம் போன்றுதான்.

சரி அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கவிரும்பவில்லை. சோ அஜித் பற்றி என்ன கூறினார்? 

எம்ஜிஆர் தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர் அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.

அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும் எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை. என்று சோ புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒரு நிபுணர் மற்றும் விமர்சகரிடமிருந்து தல-க்கு இவ்வளவு பெரிய பாராட்டு மிகவும் அதிசயம்தான்! அஜித் உண்மையில் எம்.ஜி.ஆர்.தான்! சோ-வையுமே அசத்தியுள்ளாரே தல!

6 comments:

  1. எதற்கும் தல கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்...!

    ReplyDelete
  2. இதில் என்ன அதிசயம் உள்ளது? பார்ப்பன வெறி பிடித்த சோ பார்ப்பன வழி வந்த அஜித்தைப் புகழாமல் சூத்திரன் விஜயவா புகழ்வார்?

    ReplyDelete
  3. சோ பாராட்டாவிட்டாலும் தல தலதான். .

    ReplyDelete
  4. மோனிகா சொன்னதை வழி மொழிகிறேன்.பார்ப்பான் பார்ப்பானையும்,பாப்பாத்தியையும் தான் பாராட்டுவார்கள்.ஜாதி வெறி பிடித்த நா......,

    ReplyDelete
  5. மோனிகா சொன்னதை வழி மொழிகிறேன்.பார்ப்பான் பார்ப்பானையும்,பாப்பாத்தியையும் தான் பாராட்டுவார்கள்.ஜாதி வெறி பிடித்த நா......,

    ReplyDelete
  6. ADMK need Ajith's support...,because vijay is in his separate track. that's all..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...